கல்வித் துறையில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஹரிணி வெளியிட்ட முக்கிய தகவல்
கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள டிஜிட்டல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் மயமாக்கல் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்விக்கான டிஜிட்டல் பணிக்குழுவின் காலாண்டு முன்னேற்ற மதிப்பாய்வு விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் உரையாற்றிய பிரதமர்,
பின்வருமாறு கூறினார்,
“டிஜிட்டல் கல்வி, கல்வி சீர்திருத்தங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு முக்கிய செயல்முறையாகும். இந்த சீர்திருத்தங்களை வழிநடத்துவதற்கும், தேவையான கொள்கைகளை வகுப்பதற்கும் மூன்று ஆண்டுகளுக்கு டிஜிட்டல் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்வியின் அடித்தளத்தை உருவாக்கி குழந்தைகளுக்கு வழங்கும்போது, அவர்கள் அந்தப் பாதையில் முன்னேறுவார்கள்.
எனவே, டிஜிட்டல் கல்விக்கான கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பது மிகவும் அவசியம்.
இந்த முயற்சியில் உங்கள் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.”