7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்,
வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.