மிஸ் யுனிவர்ஸ் அமைப்பாளர்களின் விதிகளில் மாற்றம்
வரலாற்று நடவடிக்கையாக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பாளர்கள் அதன் விதிகளை புதுப்பித்துள்ளனர்.
2023 முதல் திருமணமான பெண்களும் கிரீடத்திற்காக போட்டியிட முடியும். இதன்படி இதுவரை "18 வயது முதல் 28 வயது வரையிலான திருமணமாகாத பெண்கள்" என்ற விதிமுறை மாற்றப்பட்டு, "18 முதல் 28 வயது வரையிலான பெண்கள்"என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வெற்றி பெற்ற பிறகு, அவர்கள் ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்று அழைக்கப்படுவார்கள்.
பெண் அழகுக்கு சட்டக் கடமைகள் தேவையில்லை என்பது ஏற்பாட்டாளர்களின் கருத்து. இந்தப் போட்டியின் சிறப்பை பேணவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகி ப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்களுக்கு திருமணம் தடையாக இருந்ததாலும், ‘திருமதிகளின் அழகிப்போட்டியை’ உலகம் அதிகம் கவனிக்காததாலும் பல அழகான பெண்கள் வாய்ப்பை இழக்க நேரிட்டது. இதனை கருத்திற் கொண்டே தற்போது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், திருமதிகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய விதிகள் 2023 இல் இருந்து அமுலுக்கு வரும். இது குறித்து தேசிய போட்டி இயக்குநர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.