இலங்கையை ஆட்டிப்படைத்த பெண்மணி; வெளிநாட்டு வீதியில் தனியாக ....
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டில் நடைபாதை இருக்கையில் தனியே அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஒருகாலத்தில் சிங்கள மக்களின் தேவதையாக தோன்றிய சந்திரிக்கா , இன்மத பேதமின்றி இலங்கை மக்களிடையே சமாதானம் தான் வேண்டும் என கூறி இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது மிகவும் நல்லவராகவே தோற்றமளித்தார்.
வெளி உலகிற்கு தெரியவந்த சந்திரிகாவின் கோர முகம்
இலங்கை அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த ஓர் கொடிய மிருகமாகவே சந்திரிக்கா இருந்தார் . சமாதானம் என பசப்புவார்த்தைகளை கூறி அரியணை ஏறிய சந்திக்காவின் கோர முகம் 1995 இல் யாழ்ப்பாணம் சின்னாபின்னாமாக்கப்பட்டபோதுதான் வெளி உலகுக்கு தெரியவந்தது.
ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்களை குன்றுகுவித்த சிங்கள ஆதிக்கவெறியகளின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பெயரும் மறக்கமுடியாது. அப்படி இராணுவத்தினை தமிழர்கள் மேல் ஏவிவிட்டு அப்பாவி மக்களி கொன்று குவித்த அந்த பெண்மணிதான் இன்று ஆடி அடங்கி உள்ளார்.
தமிழ் இன படுகொலையில் முக்கியம் வாய்ந்த இலங்கையின் ஆட்சியாளர்களில் சந்திரிக்காவும் ஒருவர் என்பது யாராலும் மறுக்க முடியாது .
இலங்கை தமிழர்களை அழிவுக்கு முப்படைகள் சூழ ஒரு காலத்தில் தோற்றமளித்த சந்திரிக்கா, இன்று யாருமற்று தனிமையில் வீதி இருக்கையில் அமர்ந்துள்ள நிலை வந்துள்ளது.