இலங்கை தொழிலாளர் காஸ்கிரஸ் அதிரடி தீர்மானம்! இவருக்கு தான் ஆதரவு
இன்றைய தினம் (20-07-2022) இடம்பெற்றவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
The Ceylon Workers' Congress, after much deliberation, has decided to support Hon. @RW_UNP in his bid for presidency.
— Jeevan Thondaman (@JeevanThondaman) July 19, 2022
We also wish @DullasOfficial and @anuradisanayake the best for tomorrow.
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பல ஆலோசனைகளுக்குப் பின்னர், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிரவளிப்பதாக முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) மற்றும் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோரும் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.