வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்கி தரப்பில் வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறினார்.
வாகன இறக்குமதியை மட்டுப்படுத்தல்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்
வாகன இறக்குமதியை மட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும்.
அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.
இது rescission நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இது marco promotional மத்திய வங்கியின் பணவியல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் வாங்குபவரின் திறன் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது. இந்த நேரத்தில் சில வகையான சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.