யாழ். நகர் பகுதியில் தனியார் காணியில் மீட்கப்பட்ட மர்மபொதியால் பரபரப்பு
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய தினம் (08) துப்பரவு செய்த வேளை , துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர்.

அறிக்கை தாக்கல்
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர்.
அதனுள் கையெறிகுண்டு , கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன.
பொதியினுள் உள்ள வெடிபொருட்கள் தொடர்பில் யாழ் . நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் , நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.