யாழில் நீண்டநாள் குடும்பத்தோடு அரங்கேற்றிய மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலம்
யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

போதைப்பொருள் விற்பனை
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் மறைவான இடத்தில் மாடி வீட்டில் வாழ்ந்துவரும் குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார் அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் பல சந்தர்ப்பங்களில் கையும் களவுமாக போதை மற்றும் சாராயங்களுடன் பொலிசாரிடம் பிடிபட்டும் தனது விசுவாசிகளை அச்சந்தர்ப்பங்களில் சட்டத்தின் முன் நிறுத்தச் செய்து தண்டங்ககும் நீதிமன்ற தண்டனையையும் செலுத்தி அவர்களை மீட்டு தொடர்ந்தும் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.