ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 2023ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது, அரச நிதியில் சுமார் 16.6 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் விசாரணைகள் நிறைவடைந்து, தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று சட்டமா அதிபரின் நிலைப்பாடு நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முன்னாள் ஜனாதிபதியுடன் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.