இந்திய எல்லை கடந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு
இந்தியாவின் ஆந்திரா - ஒடிசா எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் கஞ்சா கடத்தல் தொடர்பான தகவல்களை இந்தியப் பொலிஸார் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் ஆந்திரப் பகுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் ஒருவரினால் இந்தக் கடத்தல் வழிநடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன், வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் கஞ்சாவை களஞ்சியப்படுத்தி வைத்து இவ்வாறு இலங்கைக்கு கடத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, குறித்த வீட்டிலிருந்து 74 கிலோ கிராம் கஞ்சா, கார் ஒன்று, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.