கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டு தீ வைப்பு
ஹம்பேகமுவ பகுதியில் 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான கஞ்சா தோட்டம் முற்றுகையிடப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஹம்பேகமுவ பகுதியில் உள்ள ஒரு பெரிய அளவிலான கஞ்சா பண்ணையை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் கஞ்சா பண்ணையில் 50 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள செழிப்பாக வளர்க்கப்பட்ட பல கஞ்சா செடிகளை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன்போது அனைத்து கஞ்சா செடிகளும் தீக்கிரையாக்கப்பட்டதுடன் , சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.