கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ; மஹிந்த விமர்சனம்

Mahinda Rajapaksa Mullivaikal Remembrance Day Sri Lanka Final War Canada
By Sulokshi May 18, 2025 10:17 AM GMT
Report

  கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு 16வருடங்களாகியுள்ளதை குறிக்கும் விசேட நீண்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ ,

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ; மஹிந்த விமர்சனம் | Canada Tamil Genocide Memorial Mahinda Criticizes

'எங்கள் தாய் நாடு பிரிவினைவாத பயங்கரவாத ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை உங்களிற்கு தெரியும்.

இன்று முதல் நாட்டின் ஒவ்வொரு அடிநிலமும் இலங்கையின் இறைமையுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களி;ன் அடிப்படையிலேயே ஆளப்படும்".

நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து 2009 மே 19ம் திகதி நான் வெளியிடப்பட்ட இந்த பிரகடனத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

சிங்க கொடியின் கீழ் ஒன்றுபட்ட மற்றும் பெருமைமிக்க தேசத்தின் ஜனாதிபதியாகவும், முப்படை தளபதியாகவும் நான் இந்த பிரகடனத்தை வெளியிட்டேன்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத குழுக்களில் ஒன்றை முற்றிலுமாக அழித்து,ஒவ்வொரு குடிமகனும், இந்த நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும்,

சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், சமஉரிமைகளுடனும் வாழக்கூடிய ஒரு தேசத்தை என்பது நம் அனைவராலும் நீண்டகாலமாக காணப்பட்ட ஒரு கனவாகும். ஒரு மக்கள் தலைவராக அது எனது தனிப்பட்ட கனவாகவும் காணப்பட்டது.

2005ம் ஆண்டு நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவேளை ,விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தனிநாட்டிற்கான தயாரிப்பில் வடக்குகிழக்கில் ஏற்கனவே நிர்வாக மையங்களை ஏற்படுத்தியிருந்தனர். 

 அவர்கள் எமது தாய்நாட்டின் மூன்றிலொரு பகுதியையும் கடற்கரைiயின் ஒரு பகுதியையும் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.

வடக்கில் உள்ள எங்களின் சொந்த தமிழ் பேசும் மக்களை அவர்கள் பயமுறுத்தி,பிணைக்கைதிகளாக மிரட்டி பிடித்து,அநியாயமாக வரிவிதித்து, இளைஞர்கள் பெண்களை பாடசாலை மாணவர்களை தங்கள் அணிகளில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டனர்.

அவர்களின் தாக்குதல்கள் நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், மத அரசியல் தலைவர்கள் பொதுமக்களை குறிவைத்தன.

இறுதியில் மக்களின் தாகத்தை தணித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிற்கு நீர் வழங்கும் நீர்ப்பாச நீரை கூட அவர்கள் தடுத்துவைத்திருந்தனர்.இது அவர்களின் தீவிரவாதத்தின் கொடுரமான அளவை காட்டுகின்றது.

அவர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் அப்பாவி மக்களின் குருதிகளை சிந்தி, இலங்கைக்கான புதிய வரைபடத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

உலகின் வல்லரசுகள் கூட பயங்கரவாதம் குறித்த அச்சத்தில் சிக்குண்டிருந்தவேளை ,நான் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள திட்டமிட்டேன் இது மனிதாபிமான நடவடிக்கை.

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்ற என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது.

பிரம்டன் மேயர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

யுத்தம் நடைபெற்றவேளை முப்படை தளபதியாக விளங்கியவன் என்ற அடிப்படையில் அதனை நான் முற்றாக மறுக்கின்றேன் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US