நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகள் இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து உண்பது அவசியம்.
அந்த வகையில், இனிப்புச் சுவை கொண்ட பீட்ரூட்டை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.

இரத்தச் சர்க்கரை
மருத்துவர் ஒருவரின் கருத்துப்படி பீட்ரூட்டில் இயற்கையான சர்க்கரையுடன் அதிகளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றன.
எனவே, அளவோடு உட்கொள்ளும்போது இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கக்கூடும்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் உள்ளிட்ட சேர்மங்கள் மூளை மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும் என்றும், இன்சுலின் செயல்பாடு மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் தொடர்பிலும் நன்மைகள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்ரூட்டை சாலட் உள்ளிட்ட உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். எனினும், பீட்ரூட் சாறு அல்லது அதிகளவில் உட்கொள்வது இரத்தச் சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும் என்பதால், ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப அளவைத் தீர்மானிப்பது அவசியம்.
நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் பீட்ரூட்டை சேர்ப்பதற்கு முன்னர் மருத்துவர் அல்லது தகுதியான உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.