யாழில் வீதியில் நின்றவர்களை மோதிய பேருந்து ; தந்தை பலி ....மகன் மருத்துவமனையில்
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தந்தை பலி
நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் தந்தை மற்றும் மகன் வீதியில் நின்றுக்கொண்டிருந்த போது தனியார் பஸ் ஒன்று தனது சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த வேளை தந்தை, மகன் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பஸ்ஸை எடுத்துச் சென்ற இளவாலை பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.