பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் பேருந்து காரும் மோதி விபத்து; நால்வர் பலி
இன்று மாலை பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காரில் பயணித்த ஐவரில் நான்கு பேர் பலி
இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
முரசுமோட்டை பகுதியில் நடந்த விபத்தில் காரில் சென்ற நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.