அதிகாரத்திற்காக மோதிக்கொள்ளும் அண்ணன் தம்பி!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு இடையில் கடுமையான மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்களை குறைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கையினால் ஆளும் தரப்பிற்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் மற்றும் இம்முறை அவ்வாறு செய்யக்கூடாது என்ற மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அரசாங்கத்திற்குள் பாரிய முரண்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல தேவையற்ற நெருக்கடிகளுக்கு நிறைவேற்று அதிகாரங்களே பிரதான காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் கருதுகின்றனர்.
எனினும், நிறைவேற்று அதிகாரங்கள் பல பிரச்சினைகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடிந்துள்ளதாக கோட்டாபாய ராஜபக்ஷ தரப்பு கருதுகின்றது.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கும் பிரேரணையை இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தரப்பு முன்வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.