ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் லஹிருவிற்கு தங்க பதக்கம்
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும். போட்டியை நிறைவு செய்ய அவர் 4 நிமிடங்கள் 52.32 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.
இதேவேளை, ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த தங்கப் பதக்கத்தை வென்றார்.
போட்டியை நிறைவு செய்ய அவர் 3 நிமிடங்கள் 57.42 வினாடிகளை எடுத்துக் கொண்டார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஓர் இலங்கையர் வென்ற முதல் தங்கப் பதக்கமாக இது பதிவானது.
இப் பதக்கத்துடன், இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 02 ஆக உயர்ந்தது.