ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துங்கள் !(Photos)
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்து இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுள் நிறைவடைகின்றது.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரவேண்டுமெனத் தெரிவித்தும் குண்டுத்தாக்குதல்களில் பலியான மற்றும் படுகாயமடைந்தவர்களை நினைவு கூர்ந்தும் (21) காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரை நீர்கொழும்பு - கொழும்பு வீதியின் இருமருங்கிலும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பெருமளவானவர்கள் இந்த நீதிகோரிய போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதன் பின்னர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.