தாயின் புகைப்படத்தை அணைத்தபடி மணமேடைக்கு வந்த மணமகள்! உருகும் நெட்டிசன்கள்
பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தனது மறைந்த தாயின் புகைப்படத்தை கையில் அணைத்தவாறு, திருமணத்தில் கலந்து கொண்டுள்ள நிகழ்வு இணைததில் வைரலாகியுள்ளது.
தந்தையின் கையை பிடித்தபடி , தாய் புகைப்படத்தை மறு கையில் அணைத்துக்கொண்டு, மணமேடைக்கு அவர் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது திருமணத்தில் தாய் நேரடியாக பங்கேற்க முடியாது.
இருப்பினும், அவரது புகைப்படமாவது இடம்பெறட்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட மணப்பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தை பிரபல புகைப்பட கலைஞர் மகா வஜாகத் கான் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த மணப்பெண்ணின் தாயார் உயிரிழந்துள்ளார். அவரின் புகைப்படத்தை கையில் வைத்தவாறு, இன்னொரு கையில் தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு மணமேடைக்கு மணப்பெண் வருகிறார். 57 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ தற்போது 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
குறித்த காணொளிக்கு நெட்டிசன்கள் கமென்ட்டுகளில்,
'இந்த வீடியோவை பார்க்கும் போதெல்லாம் அழுகை வருகிறது. தாய் என்பது இறைவன் கொடுத்த மிகச்சிறந்த வரம். இந்த வீடியோவை பார்க்கும்போது என் தாயை நினைத்துப் பார்க்கிறேன்.
பெண்களுக்கு இதுபோன்ற நிகழ்வு எல்லாம் துயரமான தருணம். என் தாய் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை' என்று உருகியுள்ளனர்.