கையூட்டல் புலனாய்வு ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் (Asset and liability declarations) சமர்ப்பிப்பதற்காக நிறுவப்பட்டுள்ள மத்தியமயமாக்கப்பட்ட மின்னணு முறைமையைப் பயன்படுத்துவது தொடர்பாக, உத்தியோகபூர்வமற்ற வழிகாட்டல்களைப் பின்பற்றுவதை தவிர்க்குமாறு கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக விவகாரம் ; சட்டத்தை மீறும் பிக்குகளுக்கும் தப்ப முடியாது ; நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை
இணையத்தள (Online) தளத்தை எவ்வாறு அணுகுவது, தகவல்களை எவ்வாறு உள்ளீடு செய்வது மற்றும் அதனை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து ஆணைக்குழுவுடன் தொடர்பில்லாத பல்வேறு வெளித்தரப்பினர் அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வுகளையும் வழங்கி வருவதை ஆணைக்குழு அவதானித்துள்ளது.
அவ்வாறு வெளித்தரப்பினரால் பரப்பப்படும் சில தகவல்களும் நடைமுறைகளும் துல்லியமற்றவை எனவும், ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைக்கு முரணானவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ கட்டமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள்; அல்லது அமைப்புகளால் வழங்கப்படும் தவறான தகவல்களுக்கோ அல்லது வழிகாட்டல்களுக்கோ ஆணைக்குழு எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மின்னணு முறைமையின் ஊடாக சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், அவை குறித்து ஆணைக்குழுவின் 'சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனப் பிரிவை' (Assets and Liabilities Declaration Division) மட்டுமே தொடர்புகொண்டு தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த மின்னணு பிரகடனத் தளம் தொடர்பான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, பொதுமக்கள் பின்வரும் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு எண்களை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், அந்த தொலைபேசி எண்கள் - 0767011954, 0112587284