தாயின் இரண்டாவது கணவனால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்; பிரபல இசைக் கலைஞர் கைது
கணவன் - மனைவிக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கான 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையின் பிரபல இசைக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்மோதர என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவன் உயிரிழப்பு
பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் அவர் திருமணம் முடித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது வாக்குவாதமாக மாறி, வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு குறித்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்றுபோது 10 வயது மகனின் தலையில் கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் பின்னர் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , துரதிஷ்டவசமாக சிறுவன் நேற்று (28) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டாவது திருமணம்
சம்பவத்தில் மொரவக, வெலிவ பகுதியில் உள்ள பௌத்த பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு கல்வி கற்கும் சதேவ் மெத்சர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரபல இசைக்குழு ஒன்றின் பாடகரும் வாத்தியக் கலைஞருமான நபர்,
இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மொரவக்க பொலிஸார் நேற்று காலை அவரை கைது செய்துள்ளனர்.