மட்டக்களப்பு சீர்திருத்த இல்ல பெண் மேலாளர் தொடர்பில் பகீர் தகவல்கள்!
மட்டக்களப்பு - கல்முனை சீர்திருத்த இல்லத்தில் சிறுவன் ஆனந்ததீபன் தர்சாத் உயிரிழந்தமைக்கு காரணமாக பெண் மேலாளர் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சிறுவனை விக்கட் பொல்லால் அடித்துக் கொன்ற பெண் போதைக்கு அடிமையானவர் என்றும், நன்னடத்தை இல்ல சிறுவர்களை துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்துபவம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்
அதுமட்டுமல்லாது போதைப் பொருளை உட்கொண்ட பின்னர் சிறுவர்களை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி துன்புறுத்துபவர் எனவும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்முனை சீர்திருத்த பாடசாலையில் கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சாத் எனும் 15 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நவம்பர் 30 ஆம் திகதி குறித்த இல்லத்திலுள்ள கூண்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்மேற்பார்வையாளர் ,பராமரிப்பு நிலையத்தில் சிறுவன் தொடர்ச்சியாக அநாகரிகமாக நடந்துகொண்டதனால், சிறுவன் மீது பொல்லால் தாக்கி அவரை கூண்டில் அடைத்ததாகவும் அதன் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் மேற்பார்வையாளரை சனிக்கிழமை (02) கைது செய்த கல்முனை பொலிசார் அவரை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.