யாழில் வாளுடன் காணொளி வெளியிட்ட சிறுவன் அதிரடியாக கைது!
Sri Lanka Police
Jaffna
TikTok
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனே கைதாகியுள்ளார்.
கைதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல்
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் , சிறுவனிடம் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US