விளையாட்டு மைதானத்தில் மர்ம மரணம் ; துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு
காலி, ரத்கம – மாலிதுவ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் 200 நாட்களில் 18.7 பில்லியன் டொலர் முதலீட்டு உறுதிமொழிகள் ; தமிழகத்தில் புதிய சாதனை
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், இதனால் குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உயிரிழந்த நபரின் அடையாளம், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.