ஐரோப்பிய நாடொன்றில் காதலன் வெறிச்செயல்; இளம் தமிழ் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்
நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 2 ஆம் திகதி இரவு 01.20 மணியளவில் எல்வெரும்மில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
காதலன் வெறிச்செயல்
சம்பவத்தில் 30 வயதான பல் வைத்தியரான யுவதியே உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், யுவதியின் முன்னாள் காதலரே இந்த கொலைக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை யுவதியின் சடலம் இருந்த காருக்குள், முன்னாள் காதலனும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் , இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என போலீசார் கருதும் ஆயுதம் கிடைத்ததாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்பில் பொலிஸாருக்கு பலமுறை யுவதி முன்கூட்டியே அறிவித்திருந்தார் என்றும் கூறப்படுவதுடன், உயிரிழந்த தமிழ் யுவதி ஓஸ்லோவில் பல் மருத்துவப் படிப்பை முடித்தவர் என்றும் கூறப்படுகின்றது.
32 வயதான அந்த இளைஞன் தொடர்பில் யுவதி, பொலிசில் முறையிட்டதை தொடர்ந்து, அவரை தொடர்பு கொள்ள இளைஞருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும் , இளைஞன் அதை தொடர்ந்து 7 முறை மீறியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் யுவதி உயிரிழந்த காரில் துப்பாகி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.