ஜனாதிபதி ரணிலுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த கில்மிக்ஷா!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களுடன் யாழ்ப்பாண கில்மிக்ஷா எடுத்து செல்ஃபி சமூக ஊடகங்களில் அதிகம் பிகிரப்பட்டு வருகின்றது.
வடக்குக்கு நான்கு நாள் பயணமாக நேற்றையதினம் (4) வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
ஜனாதிபதி முன்னிலையில் பாடல் பாடிய கில்மிஷா
யாழில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
தென்னிந்திய தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டி நிகழ்ச்சியான சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா உதயசீலன் சூட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.