2 மாதங்களின் பின் மீட்கப்பட்ட சடலம் ; உதவ சென்றவரின் உயிரை பறித்த மண்சரிவு
வெலிமடை, கவரம்மன பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த 30 வயதுடைய ஒருவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் (RDA)சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.

மண்சரிவு
கடந்த நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் , மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது நவம்பர் 27ஆம் திகதி காலை, வீதியை வழிமறித்து வீழ்ந்திருந்த மரத்தை அகற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடும் மழையினால் மீட்பு பணிகளில் பெரும் சவால்கள் நிலவிய நிலையில், சுமார் 2 மாதங்களுக்கும் மேலான தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகே தற்போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.