இலங்கை மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் ; சென்னையில் பரபரப்பு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது.
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவி
கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் குளித்து விளையாடும் போது ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தலை மீறி எண்ணூர் கடற்கரையில் நான்கு பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        