ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம்
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் நோக்கி மீண்டும் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பலுக்கு தாக்குதல் ; 80 பேரின் சடலங்கள் மீட்பு ; அமெரிக்கா வெளியிட்ட பரபரப்பு காணொளி
குறித்த கப்பலில் சுமார் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்குப் பின்னர், அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று (04) வரை காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.






