இணையத்தைக் கலக்கும் புளூபெரி சமோசா! (Video)
இந்தியர்களிற்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்றாக சமோசா உள்ளது. பலருக்கும் சமோசா பிடித்த உணவாக உள்ளதனால் இந்தியாவில்,அதிகம் விற்கப்படும் சிற்றுண்டிகளில் ஒன்றாக சமோசா உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் தயாரிக்கப்பட்ட புளூபெரி சமோசா , கடந்த சில நாட்களாக இணையத்தைக் கலக்கி வருகின்றது.
டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே புளூபெரி சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சமோசாவில் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி ஜாம் நிரப்பப் பட்டு தயாரிக்கப்படுவதால், பார்ப்பதற்கு நீல நிறத்தில் காட்சி அளிக்கின்றது.
இந்திய மதிப்பில் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த சமோசா உணவுப் பிரியர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந் நிலையில், புளூபெரி சமோசா தயாரிக்கும் வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.