வானத்தில் மாபெரும் அதிசயம் ; வானத்தை அலங்கரிக்கும் சூப்பர் மூன்
2026ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு இன்று சனிக்கிழமை அரங்கேறவுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகில் சந்திரன் வரும்போது, அது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றுவதை 'சூப்பர் மூன்' என அழைக்கிறோம்.
இந்தநிலையில், இன்று தோன்றும் சந்திரன் வழக்கமான முழு நிலவை விட 6% முதல் 14% வரை பெரியதாகவும், சுமார் 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும்.

வட அரைக்கோளத்தில் நிலவும் கடும் குளிர்காலத்தில் ஓநாய்கள் ஊளையிடும் காலப்பகுதியோடு இது ஒத்துப் போவதால், கலாசார ரீதியாக இதற்கு 'வொல்ஃப் மூன்' (Wolf Moon) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, சந்திரன் பூமிக்கு மிக அருகில் சுமார் 362,000 கி.மீ தொலைவில் இன்று வரவுள்ளதாக ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 'சூப்பர் மூன்னை இலங்கையிலும் இந்தியாவிலும் மாலை 5:45 மணி முதல் 6:00 மணி அளவில் கிழக்குத் திசையில் சந்திரன் உதயமாகும் போது இதைக் காணலாம் எனவும், சூரிய அஸ்தமனத்தின் பின் நிலவு உதயமாகும் போது செம்மஞ்சல் அல்லது மஞ்சள் நிறத்தில் இது காட்சியளிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
அத்தோடு, நிலவுக்கு அருகிலேயே பிரகாசமான வியாழன் கோளையும் இன்று அவதானிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது