தமிழர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் ; தீவிர விசாரணையில் பொலிஸார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட விளம்பர பலகையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (2) அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு 7ம் பிரிவு சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலையில் 6.00 மணிக்கு குறித்த வர்த்தக நிலைய கட்டிட தொகுதியில் நிர்மானிக்கப்பட்ட இருந்து விளம்பர பலகை கம்பியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள்வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (01-01-2026) இரவு -7.00 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து அதே பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 3 மாதங்களாக ஒரு தொழிலும் இல்லாது வந்த நிலையில் மது அருந்துவதற்கு மனைவியிடம் ஆயிரம் ரூபா பணம் கோரியதாகவும் அவரிடம் குழந்தைக்கு பால் வாங்க 200 ரூபா மட்டும் இருந்துள்ளதாகவும் இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று குறித்த நபர் 3 முறை கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்ட உள்ளதாகவும் அதன் பின்னர் மனைவி குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தாயாருக்கு தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதேவேளை நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரை மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.