வடக்கின் முன்னாள் முக்கிய அதிகாரியால் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்!
வடமாகாணத்தில் முக்கிய பொறுப்பு வகித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, யுவதி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. பாணந்துறையில் உள்ள வீடொன்றில் வைத்து 20 வயதுடைய யுவதியொருவர் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தந்திரிமலையை சேர்ந்த யுவதி, கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலையில் சேர்ந்தார். அப்போதிருந்து, வீட்டில் யாருமில்லாத பல சந்தர்ப்பங்களில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த யுவதியின், சகோதரர்களும், தாயும் வீட்டு பணியாளர்களாவே வேலை செய்துவருவதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வீட்டில் மயக்கமடைந்து விழுந்ததை அடுத்து, பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, தந்திரிமலையிலிருந்து தாயார் அழைக்கப்பட்டு, அவருடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வீடு திரும்பிய தமக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் அனுராதபுரம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, விசாரணையின் போது இராணுவ அதிகாரியினால் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் யுவதி தெரிவித்துள்ளார்.
யுவதி வழங்கிய தகவல், வைத்தியரால் பாணந்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, பாணந்துறை தெற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் யுவதியை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து இராணுவ அதிகாரியின் தொடர்பான மேலதிக விபரங்களை சேகரித்து, முறைப்பாடு பதிவு செய்திருந்தது.
யுவதியின் முறைப்பாட்டின் பிரகாரம் பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கடந்த 13 ஆம் திகதி, இராணுவ அதிகாரியின் வீட்டிற்கு உடனடியாக சென்று சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் அறையை சோதனையிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த சம்பவத்தை மூடிமறைக்க பல்வேறு தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்து இராணுவ ஆதரவு சக்திகள் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.