உடல் எடையை குறைக்கும் பிளாக் காபி
பிளாக் காபி "எஸ்பிரெசோ" என்றும் அழைக்கப்பட்டு வருவதோடு இனிப்பு அல்லது பால் போன்ற எந்தவித கலவையும் இல்லாமல் இது உருவாக்கப்படுகிறது. இது வழக்கமான காபியில் இருந்து வேறுபட்டு கலோரிகள் குறைவானதாக காணப்படுவதனால் இதன் சுவை கசப்பாக இருக்கும்.
இதிலுள்ள அதிக அளவு காஃபின் வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் மற்றும் உடலிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இதன் கசப்பு சுவை பிடிக்காதவர்கள் பிளாக் டீயில் தேன், வெல்லம் மற்றும் நட் பால் போன்றவற்றை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
பிளாக் காபி குடிப்பதால் பசி கட்டுப்படுவதுடன் இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்ளல் தவிர்க்கப்படுகிறது.
பிளாக் காபி அந்நாளுக்கான ஆரோக்கியத்தை தருவதுடன் பிளாக் காபி எடுத்துக்கொள்வது உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரை இழக்க செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் இது உடலில் உள்ள செல்களுக்கு அதிக ஆற்றலை அளிப்பதால் செல்கள் அதிக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
பிளாக் காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளதால் இது உடலில் குளுக்கோஸ் உற்பத்தியின் அளவைக் குறைக்கும்.
அதனால் நீரிழிவு, எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான கலோரிகளின் பிற தீங்கு விளைவிக்கும் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
எடை குறைப்பிற்காக பிளாக் காபி குடிப்பவர்கள் அதில் சர்க்கரை சேர்த்துக்கொள்ள கூடாது எனவும் சர்க்கரைக்குப் பதிலாக "சைலிட்டால்" போன்ற சர்க்கரை ஆல்கஹால், பேக்கன் சிரப் போன்ற தாவர அடிப்படையிலான இனிப்புக்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் எடை இழப்புக்கு பிளாக் காபி பயன்படுத்தவேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
அதேபோல வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பது "ஹைட்ரோகுளோரிக்" அமிலம் உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் வயிற்றில் புண்கள், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். அதனால் ஏதாவது சாப்பிட்ட பிறகு பிளாக் காபி எடுத்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்படுட்டு வருகின்றது.