இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகள்
சட்ட விரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூன்று பேர் இன்று (4) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கரிசல் பகுதியில் வைத்து, பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற் படையினர் தெரிவித்தனர்.
கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்குத் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதன்போது 220 புறாக்கள், 20 ஆபிரிக்க கிளிகள் , 8 மர அணில்கள், பறவைகளுக்கான மருந்து பொருட்கள், மற்றும் பாதாம் பிஸ்தா போன்றவையும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைதான சந்தேக நபர்களையும், பறவைகள் மற்றும் மர அணில்கள் மருந்துப் பொருட்கள் அனைத்தையும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலலையத்தில் ஒப்படைத்துள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.