பிக் பாஸால் வாய்ப்புகளை இழக்கும் பிரியங்கா! தொகுப்பாளினியாக கலக்கி வரும் நபர்!
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான திகழ்ந்து வரும் பிரியங்கா முன்னனி தொலைக்காட்சியான் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இதேவேளை, நகைச்சுவை குணம் கொண்ட தொகுப்பாளினி பிரியங்கா யார் எந்த வயசு உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களிடம் மொக்கை வாங்கி அதை திருப்பி கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பார். தொகுப்பாளரும் நடிகருமான மகாபா ஆனந்துடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் பிரியங்கா சிறந்த தொகுப்பாளினி என முத்திரை குத்தினர்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார் . இந்த நேரத்தில் அவருக்கு பதில் விஜய் டிவியில் மணிமேகலை தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலுக் கல்ந்துகொண்டு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான ஷிவாங்கி மகாபாவுடன் சேர்நது 8வது சீசன் தொடங்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
மேலும், சிறந்த பாடகியும் இயற்கையிலே நகைச்சுவை திறமையும் கொண்ட ஷிவாங்கி பிரியங்காவையே ஓரம் கட்டிடுவார் என பேசப்படுகிறது.