பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா பற்றிப் புரளி பேசும் இலங்கை பெண் ஜனனி!
தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சண்டை, அழுகை, கோபம், போட்டி, பொறாமை என்பவற்றுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து விறுவிறுப்பாக இடம்பெற்று வந்த வண்ணமே இருக்கின்றது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவில் நாமினேஷனுக்கு தேர்வானோர் விபரம் பற்றிய காட்சி இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோவும் வெளிவந்திருக்கின்றது.
அதில் ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி, ரொபேர்ட் மாஸ்டர் ஆகியோர் ஒரு இடத்தில் கூடியிருந்து பேசுகின்றனர்.
அதாவது "ஆயிஷாக்கு என்னெண்டு இப்பிடி மூச்சுத் திணறல் வருது, அவா அப்பிடி என்னதான் பண்ணினவா என ஜனனி கேட்கின்றார்.
உடனே அதுக்கு ரொபேர்ட் மாஸ்டர் "இந்தப் பொண்ணு தெரிஞ்சு பண்ணுதா தெரியாமல் பண்ணுதா தெரியலையே" எனக் கூறுகின்றார்.
மேலும் அமுதவாணன் "கதிரைத் தாண்டி யாருமே ஸ்ரோங் இல்லை" எனக் கூறுகின்றார்.
இவ்வாறாக இன்றைய ப்ரோமோ ஆனது ஆளாளுக்கு புரளி பேசும் வகையில் வெளிவந்திருக்கின்றது.