ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் பிக்பாஸ் பிரபலம்! என்ன காரணம் தெரியுமா?
எத்தனை பிக் பாஸ் சீசன் வந்தாலுமே ரசிகர்களுக்கு மிகவுமே பிடித்த ஒரு பிக் பாஸ் சீசனாக இருந்து வருவது முதல் சீசன் தான்.
இந்த சீசனில் கலந்து கொண்ட பலருமே இன்று மிக பெரிய அளவில் ஒரு சினிமா பிரபலங்களாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

மேலும் இந்த சீசனில் மிக பெரிய ஒருவிஷயமாக பேசப்பட்டது ஆர்வ் மற்றும் ஓவியாவின் நூறு நாள் காதல். ஆனால் அந்த பிக் பாஸ் வீட்டினை விட்டு வெளியே வந்ததும் இருவரும் அவர் அவர்களின் வேலையை பார்க்க சென்று விட்டனர். அப்படி பிக் பாஸுனை விட்டு வெளியே வந்த சில மாதங்களிலேயே நடிகை ராஹி என்பவருடன் காதல் வலையில் வீழ்ந்தார்.
நடிகை ராஹி கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போது தான் இந்த காதல் ஆரவுடன் ஏற்பட்டு இருக்கின்றது. நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

பல சினிமா பிரபலங்கலுமே கலந்து கொண்ட இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம் சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
இப்போது அவரின் முதலாம் ஆண்டு திருமண நாளினை கொண்டாடும் நேரத்தில் நிலையில் ஆரவ் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் இந்த செப்டெம்பர் மாதம் மனைவியின் சீமந்தத்தை முடித்து இருக்கிறார் ஆரவ்.