பெத்தும் கேர்னருக்கு விளக்கமறியல்!
முன்னணி போராட்டக்காரரான பெத்தும் கேர்னர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்தரமுல்லை – பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற நுழைவு சுற்றுவட்டம் முதல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிசிடி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் அவர் நேற்று ( 28) சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை குறித்த வழக்கில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும் என சிசிடி. அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே அவரை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யுமாறு, மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல அறிவித்தார்