ஒன்றுடன் ஒன்று மோதிய ரயில்கள்! விசாரணைகளை ஆரம்பித்த திணைக்களம்
பெலியத்த புகையிரத நிலையத்தில் ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா புகையிரதங்களின் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (15-12-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரஜரட்ட ருஜின புகையிரதத்தின் இயந்திரம், இயந்திர மாற்றத்தால் நிலைதடுமாறியிருந்த ‘சகரிகா’ ரயிலுடன் மோதியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் ‘சாகரிகா ரயிலுக்கு’ கணிசமான சேதம் ஏற்பட்டதால், அது நாளை (16) காலை இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்து காரணமாக காலை 8.45க்கு பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இயக்கப்படவிருந்த ரஜரட்ட ருஜின ரயிலும் தாமதமாகவே இயக்கப்பட்டது.