இலங்கையில் 5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இல்லாத நிலையில் 5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகிய அமைச்சின் விவகாரங்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.