மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் விசனம் தெரிவித்துள்ள முகநூல்வாசி
குளவி குத்தியவருக்கு காலை கழட்டுமளவிற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் காணப்படுகின்றன என முகநூல்வாசி ஒருவர் தனது பதிவை முகநூலில் பதிவேற்றியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவருக்குக் கால் பாதத்தில் குளவி கொத்தியபோது வீட்டு வைத்தியம் செய்து அவரது பணிகளைத் தொடர்ந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கிலக்கான நபர் சர்க்கரை நோயாளி என்பதால் குளவி கொட்டிய பகுதியில் கிருமித்தாக்கம் ஏற்பட்டிருந்தமையால் கால்வீக்கம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை பார்வையிட்ட வைத்திய நிபுணர் கால் பாதம் முழுவதும் கிருமித்தொற்று பரவியுள்ள அனைத்து இடங்களையும் அகற்றியுள்ளனர்.
மூன்று தினங்களின் பின்னர் குறித்த நபர் கட்டவிழ்த்துப்பார்க்கையில் கால் பாதத்தில் அரைவாசிப்பகுதி வெட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குறித்த நோயாளியின் பிரச்சினை தொடர்பான வைத்திய நிபுணர் ஒருவரை அணுகி அவரிடம் காட்டிய போது பணமிருந்தால் இப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்யலாம் என்றுத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பணம் இருந்தால் கூட இப்போது மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் எல்லாம் போன உடனே ஒரு லட்சம் ரூபாய் முற் பணம் கட்ட வேணும் முற்பணம் கட்டிய பிறகு அவருக்கான அந்த சிகிச்சைகள் அளிக்கப்படும் என கூறினார்கள்.
தற்போது அந்த காலில் இருந்து எடுக்கப்பட்ட சதைகள் வளர்வதற்கான மருந்து கட்டிக் கொண்டிருக்கும் வேளையில் இவருக்கான சத்திர சிகிச்சை திகதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி சத்திர சிகிச்சைக்கான திகதிக்கு சத்திர சிகிச்சைக்கு சென்ற போது மீண்டும் அதில் கிருமி பரவியுள்ளது அத்தோடு அதிகளவான சதைகளும் வளர்ந்துள்ளதால் இந்த சதையை சீவி இந்த கிருமியை அழிக்க வேண்டும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இப்போது சதையும் அதிகமாக வளர்ந்துள்ளது கிருமியும் தொற்றியுள்ளது ஒன்றும் செய்ய முடியாது சதை வெட்டப்படுவதற்காக ஒரு இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக அந்த வைத்தியசாலை பணம் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிருமி இருக்கிற காரணத்தினால் இரண்டாவது தரம் சத்திர சிகிச்சை செய்ய முடியாது.
இதற்கு நோய் எதிர்ப்பு தடுப்பு ஊசிகள் போட வேண்டும் என்று 55 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணங்களை அந்த தனியார் வைத்தியசாலை ஊசிகளை வாங்கியுள்ளது.
முதலாவது ஊசி போட்டு இரண்டாவது நாள் நோயாளியின் மருத்துவ அறிக்கை வருகின்றது இவருக்கு எந்தவிதமான கிருமியும் இல்லை என ஆனால் முதற்கட்டமாக அந்த ஒரு லட்ச ரூபாய் பணம் கட்ட சொன்னதால் இந்த பணத்தை கட்டிய நோயாளியின் குடும்பம் எப்படியாவது தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த 50,000 ரூபாய்க்கு ஊசி வாங்கப்பட்டு கிருமி இல்லை என்ற போதும் அந்த நோய் எதிர்ப்பு தடுப்பு ஊசியை வாங்கிய காரணத்துக்காக அவருக்கு செலுத்தி உள்ளார்கள்.
தனியார் வைத்தியசாலை பணம் கறக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்களா என்ற பதிலை வழங்க முடியும்.
மீண்டும் இரண்டாவது தடவை குறித்த சத்திர சிகிச்சைக்கு அவரது தொடையிலிருந்து தோல் சீவி அதை அந்த பாதத்தில் போட்டு அவரை சீர் செய்வதற்கு இதுவரை ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவாகியுள்ளது.
ஒரு வைத்தியசாலை செய்கின்ற பிழைக்காக ஒரு வறுமை குடும்பத்தில் இருந்த ஒரு நபர் தனது காலை கழட்டி விடுவார்கள் என்ற காரணத்துக்காக 5 லட்சம் ரூபாய் செலவழித்து இன்று அவருடைய கால் 80 வீதம் குணமடைந்துள்ளது.
மட்டக்களப்பு வைத்தியசாலை மரண வைத்தியசாலையாக மாறியுள்ளதுடன் கிருமி வைத்தியசாலையாகவும் மாறி இன்று பண முதலைகளின் கூடாரமாக காட்சியளிக்கின்றது.
படிப்பதற்காக வருபவர்களுக்கு உயிரிழந்தவர்களை வைத்து படிக்கின்ற காலம் போய் உயிருள்ளவரை வைத்து படிப்பிக்கும் காலம்தான் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை அதிகளவான கொலைகள் நடந்திருக்கின்றது எனக் குறித்த முகநூல்வாசித் தெரிவித்துள்ளார்.