மட்டக்களப்பில் பயங்கர விபத்து... ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
மட்டக்களப்பில் உள்ள வீதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் குடுமப்ஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்றையதினம் (10-11-2024) ஓட்டமாவடி, மியாங்குளம் - கொழும்பு வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஓட்டமாவடி அக்பர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய முகம்மது இஸ்மயில் பாறுக் என்பவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் தான் முகாமையாளராக பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடமைக்குச் செல்லும் போதே விபத்தில் சிக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் மீது, எதிரே வந்த சிறிய லொறி மோதியதில் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.