மட்டக்களப்பு பெண் கடத்தல் விவகாரம்; சந்தேக நபர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட உத்தரவு
மட்டக்களப்பில் பரப்பரப்பினை ஏற்படுத்திய கடத்தல் கொலை தொடர்பான வழக்கு நேற்று (29) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்ப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிவான் நீதிமன்றம் நீதிபதி அண்ணாத்துறை தர்சின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கடத்தல், கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதோடு குறித்த கடத்தல் மற்றும் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட முச்க்கரவண்டியினை உரிய நபரிடம் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல், கொள்ளை, மற்றும் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை மே மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளது.