கொஞ்ச காலம் பேட் மேன்; இப்போது பஸ் மேன்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து, பேசிய போது பேட் மேன் என்று அழைக்கப்பட்டதாகவும், இப்போது பேருந்துகள் அன்பளிப்புச் செய்யப்படும் போது முகநூலில் பஸ் மேன் என்று அழைக்கப்படுவதாகவும்,அவ்வாறு அவமானப்படுத்துபவர்கள் சொகுசு பேருந்துகளை வாங்கி தங்கள் விருப்ப இலக்கங்கள்,கட்சிச் சின்னங்கள் போன்றவற்றை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொண்டு நாடு முழுவதும் சென்று வாக்கு கேட்டு வருவதாகவும்,அவ்வாறு அவர்கள் செய்தாலும்,ஐக்கிய மக்கள் சக்தி பாடசாலைகளுக்கு இலவசமாக பஸ்களை வழங்குவது தவறு என கூறி குற்றம் சுமத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் திருடர்கள் குழுவிடம் நாட்டை ஒப்படைத்த பின்னர்,நாட்டை இஷ்டம் போல கொண்டு சென்று நாட்டின் வளங்களை சுரண்டி கொள்ளையடித்தனர் எனவும்,நாட்டையே வங்குரோத்தாக்கி விட்டு தற்போது மின்கட்டணத்தை உயர்த்துவதாகவும்,நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற மின்கட்டணத்தை உயர்த்தாமல் திருடப்பட்ட பணத்தை நாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் குறித்த பணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகள் வழங்கும் திட்டத்திற்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்படுவதாகவும்,அது பொருட்களை விநியோகம் செய்வது போன்று அழைக்கப்படுவதாகவும்,ஆனால் இது இலவசக் கல்வி என்ற எண்ணக்கருவை மேலும் வலுப்படுத்து சார்ந்ததேயன்றி அரசியல் நோக்கத்திற்காக வழங்கப்படும் ஒன்றல்ல எனவும், நாடு முற்றாக வங்குரோத்து நிலையில் உள்ள வேளையில் எதிர்க்கட்சி மக்களுக்காக செய்யும் வேலைத்திட்டம் இது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவி தேவைப்படுவதாகவும்,அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அவை பெறப்படுவதாகவும்,அதற்காக நல்ல தொடர்பாடல் இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டால் டொலர்கள் கிடைக்கும் என்று விசித்திரக் கதைகள் கூறப்பட்டாலும்,இதுவரை டொலர்கள் அதிகரித்தபாடில்லை எனவும்,நன்கு கல்வி கற்கும் பிள்ளைகள் தலைமுறையினூடாகவே நாட்டை இந்நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி இந்த மாதிரியான திட்டத்தைச் செய்யும் போது கூட,கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களைக் கொண்டுவர அரசாங்கம் இறக்குமதி தடை விதித்துள்ளதாகவும்,அதனால்,பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் திட்டம் சில காரணங்களால் தடைபட்டாலும்,அது கைவிடப்படவில்லை எனவும்,எதிர்காலத்தில் இது மிகவும் வினைதிறனாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 66 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று நுகெகொடை மகமாயா மகளிர் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் அன்பளிப்புச்செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.