ஜனாதிபதி ரணிலுக்கு பசில் ராஜபக்க்ஷ அளித்த உறுதிமொழி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று (14)ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ச மேற்கண்ட உறுதி மொழியை அளித்துள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச,
ஜனாதிபதிக்குப் பசில் புகழாரம்
சில தொழிற்சங்கங்களும் தமது கட்சியைச் சேர்ந்த சில உள்ளுர் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பாடான நிலையில் கருத்து வெளியிடுவதாகவும், ஆனால் அந்த பிரச்சினைகள் எதுவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்காத அளவுக்கு தீவிரமானவை அல்ல எனவும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் மூலம் ஒன்றிணைந்து செயற்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும், அதற்காக மாதத்திற்கு ஒரு நாள் அதிபரை நேருக்கு நேர் சந்திப்பது அவசியமானது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் உட்பட பொதுஜன பெரமுன கட்சி அண்மைக்கால வரலாற்றில் பல அதிபர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், அந்த அனுபவத்தின்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதுவரை எந்தவொரு அதிபரிடத்தும் இல்லாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செயற்பாட்டுப் பணியாளர்கள் இருப்பதாகவும் பசில் ராஜபக்ச புகழாரம் சூட்டியுள்ளார்.
அதேசமயம் , தற்போது முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளுக்கான எமது முன்மொழிவுகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும்” என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு கலந்துகொண்டிருந்தனர்.