சகோதரி உயிரிழந்தமைக்கு ஆதாரம் கேட்ட வங்கி அதிகாரிகள் ; பிணைத்தை தோண்டி எடுத்து வந்த அண்ணனால் ஷாக்!
இறந்துபோன தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க சென்ற சகோரனிடம் , வங்கி அதிகாரிகள் இறப்புக்கு சான்று கேட்டதால், பெண்ணின் புதைத்த உடலை தோட்டி எடுத்து அதனுடன் , சகோதரன் வங்கிக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் ஒடிசாவில் அரங்கேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆதாரம் கேட்ட வங்கி அதிகாரிகள்
இந்தியா ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சார் மாவட்டத்தில் இறந்த தனது சகோதரியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் தருமாறு ஒரு பழங்குடி அண்ணன் வங்கிக்கு சென்றுள்ளார்.
எனினும் சகோதரியின் இறப்புக்கு சான்றில்லாமல் பணம் தரமுடியாது என்று வங்கி தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டதால் வேறு வழியின்றி புதைக்கப்பட்ட தமது சகோதரியை தோண்டி எடுத்து எலும்புக் கூட்டோடு வங்கிக்கு வந்த பழங்குடி மனிதரை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.
படானா வட்டாரத்தில் உள்ள மலிபோசி கிளை ஒடிசா கிராமீன் வங்கியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசும், நிர்வாக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டனர். 50 வயதான ஜீது முண்டா என்ற நபர், 2026 ஜனவரி 26ஆம் தேதி இறந்த தனது அக்கா கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் இருந்த ₹20,000 பணத்தைப் பெற முயன்று வந்துள்ளார்.
வங்கி அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பவரை நேரில் கொண்டு வர வேண்டும் என்று கூறியபோது அவர் இறந்துவிட்டார் என்று பலமுறை சொன்னேன்.
யாழில் 25 ஆண்டுகால ஆக்கிரமிப்பின் பின் விடுவிக்கப்பட்ட புகழ்பெற்ற ஆலயம் ; முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்
அவர்கள் கேட்கவில்லை. அதனால் கோபத்தில் கல்லறையை தோண்டி எலும்புக்கூட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்,” என்று ஜீது முண்டா கூறினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.