நாமலின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவைப் பிணையில் விடுவிக்கக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரைத் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து உத்தர பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.