தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்த அவர், தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்ததுடன், 26 ஆண்டுகளாக நீடித்து வந்த இலங்கையின் தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் ஹரிஜன் ரத்நாயக்க பதிவு செய்த 49.44 வினாடிகளே இலங்கையின் தேசிய சாதனையாக இருந்து வந்தது.
அயோமால் அகலங்கவின் இந்தச் சாதனை, இலங்கை மெய்வல்லுனர் வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளதுடன், சர்வதேச அரங்கில் நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.