கா.பொ.த சாதாரண தர பரிட்சையில் சாதனை படைத்த ஆயிசா அமீனா!
ஆயிசா அமீனா பௌத்த சமய பாடம், சிங்கள பாடம் அடங்களாக 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெல்லவாய மல்வத்தாவல சிங்கள தேசிய பாடசாலை மாணவியான, மொஹம்மது பாரிஸ் ஆயிசா அமீனா, கா.பொ.த சாதாரண தர பரிட்சையில் 9A பெற்றுள்ளார்.
சிங்கள மொழி மூலம் பரிட்சைக்கு தோற்றிய இவர் பௌத்த பாடம், சிங்கள மொழி பாடம், சிங்கள இளக்கிய நயம் பாடங்கள் அடங்களாக அனைத்து பாடங்களிலும் 'A' சித்தி பெற்றுள்ளார்.
பொறியியலாளர் ஆவதே தனது இலட்சியம் எனக்கூறும் இவர் பாடசாலையின் அனைத்து பெரும்பான்மை ஆசிரியர்களுக்கும் பாரபட்சமின்றி தனக்கு பாடங்களை கற்பிப்பதால் ஏனைய மாணவர்களை விட சிறப்பான சித்திபெற முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
அயிசா அமினாவின் தந்தை வெல்லவாய நகரில் துவிச்சக்கர வண்டி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட்டதக்கது.